சிவகார்த்திகேயன் 23 படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடக்கம்
1701608494763

அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ், மாவீரன் உள்ளிட்ட படங்கள் வெளியாகின. மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான மாவீரன் திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதோடு, வசூலையும் அள்ளியது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் 23-வது திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் அறிவிப்பு வெளியானது. தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் ஜம்மு காஷ்மீரில் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து 23 வது படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. மற்ற நடிகர், நடிகைகளுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.