"எஸ்கே.25" : சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா - ஜெயம் ரவி... அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான அமரன் பட வெற்றிக்கு பின் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 24-வது படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்நிலையில் சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது. இந்த படத்தில் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோரும் நடிப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
#SK25 🎬@siva_kartikeyan @Sudha_Kongara @actor_jayamravi @Atharvaamurali @redgiantmovies_ @Aakashbaskaran @gvprakash @sreeleela14 @dop007 @editorsuriya @arvaround @bindiya01@supremesundar @rhea_kongara @devramnath @SureshChandraa @DoneChannel1 @teamaimpro pic.twitter.com/z19Az7jKp4
— DawnPictures (@DawnPicturesOff) December 14, 2024
அதில், எங்களது டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் Production No.2-வாக உருவாகும் திரைப்படத்தை பிரமாண்டமான முறையில் தயாரிக்க உள்ளோம் என்பதை மகிழ்ச்சியோடு இந்த தருணத்தில் பகிர்ந்து கொள்கிறேன். தமிழ்த் திரையுலகில் தன் நடிப்பால் மக்கள் மனதில் தனி இடம்பிடித்திருக்கும் திரு. சிவகார்த்திகேயன் அவர்களின் 25வது படமாக "டான் பிக்சர்ஸின் Production No.2" அமைவது எங்களுக்கு பெருமை அளிக்கிறது. பெரும் எதிர்பார்ப்புகளோடு உருவாகும் இந்தத் திரைப்படத்தை தேசிய விருதுபெற்ற இயக்குநர் திருமிகு. சுதா கொங்கரா அவர்கள் இயக்குகிறார். எப்போதுமே தனித்துவமிக்க கதைகளை தேர்வு செய்திடும் திரு. ஜெயம் ரவி அவர்களும் எங்களோடு இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் திரு. அதர்வா, செல்வி. ஸ்ரீலீலா உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவாளராக திரு. ரவி கே. சந்திரன் அவர்களும், இசையமைப்பாளராக திரு. ஜி.வி. பிரகாஷ்குமார் அவர்களும் பங்களிக்கிறார்கள். குறிப்பாக, திரு. ஜி.வி.பி அவர்களுக்கு இசையமைப்பாளராக இது 100வது திரைப்படம் என்பது கூடுதல் சிறப்பு. உங்களுக்கு புதிய திரை அனுபவத்தை கொடுக்கும் வகையில் #SK25 நிச்சயம் அமையும் என உறுதியளிக்கிறேன். என குறிப்பிடப்பட்டுள்ளது.