சிவகார்த்திகேயனின் 'அமரன்' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்..!

amaran

சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கின்ற நிலையில், இந்த படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது என்பதுடன், டிரைலருக்கு பின்னர் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்திய ராணுவத்தில் பணியாற்றி வீர மரணம் அடைந்த முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட ‘அமரன்’ திரைப்படம், நிச்சயமாக தேசப்பற்றை வெளிப்படுத்தும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ‘அமரன்’ படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும், இந்த படத்தின் ரன்னிங் டைம் 168 நிமிடங்கள், அதாவது 2 மணி நேரம் 48 நிமிடங்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடுகிற திரைப்படமாக இருந்தாலும், விறுவிறுப்பான படமாக இருந்தால் ரசிகர்கள் பொறுமையாக பார்த்து ரசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

amaran
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் முதல் முறையாக சிவகார்த்திகேயனின் திரைப்படம் ஒரு பான் இந்தியா திரைப்படமாக ‘அமரன்’ உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன், சாய்பல்லவி, புவன் அரோரா, ராகுல் போஸ், ஸ்ரீகுமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். ஜிவி பிரகாஷ் இசையில் சாய் ஒளிப்பதிவில் கலைவாணன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Share this story