சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ பட டப்பிங் பணி நிறைவு: தீபாவளி ரிலீஸ்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது.
கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘அமரன்’. இதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். ‘ரங்கூன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்துக்கு, ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் மற்றும் ராகுல் சிங் மற்றும் ஷிவ் அரூர் எழுதிய ‘இண்டியா’ஸ் மோஸ்ட் ஃபியர்லஸ்: ட்ரூ ஸ்டோரிஸ் ஆஃப் மாடர்ன் மிலிட்டரி’ புத்தகத்தின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகிறது.
Thank you dear @Siva_Kartikeyan :))🤗#AmaranDiwali #AmaranDubbingConcludes https://t.co/Ot1aI2XBtC pic.twitter.com/6CeeisUUxN
— Rajkumar Periasamy (@Rajkumar_KP) September 14, 2024
இதில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ளார். இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் ரூ.55 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியானது. சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் இதுவே அதிக தொகைக்கு விற்பனையாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் தீபாவளி பண்டியை முன்னிட்டு வரும் அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.