சிவகார்த்திகேயனின் அமரன் படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்...!

amaran

சிவகார்த்திகேயன் நடித்துள்ள  ‘அமரன்’ திரைப்படம். சர்வதேச  விருது விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது


சிவகார்த்திகேயன் - சாய்ப்பல்லவி நடிப்பில் உருவான திரைப்படம் அமரன். நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை தயாரித்திருந்தார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்த இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார்.

amaran

மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருந்த இப்படம் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று திரைக்கு வந்தது.வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவாக வந்தது. விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம் 300 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.அண்மையில், அமரன் படத்தின் 100வது நாள் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. 


இந்நிலையில், அமெரிக்காவில் நடக்கும் world culture film festival விருது விழாவில் அமரன் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்திற்கான டாப் 10 inspiring films லிஸ்டில் அமரன் திரைப்படம் இடம்பிடித்துள்ளது. இதன் மூலம் அமரன் திரைப்படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவிற்கும் பெருமையான விஷயமாக பார்க்கப்படுகின்றது.

Share this story