சிவகார்த்திகேயனின் பாக்ஸ் ஆபிஸ் வேட்டை.. முதல் நாள் வசூலில் சாதனை படைத்த அமரன்
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிக்கும் அமரன் திரைப்படம் நேற்று தீபாவளியன்று உலகம் முழுவதும் ரிலீஸான நிலையில், முதல் நாளில் சுமார் ரூ.42.3 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி அமரன் திரைப்படம் உருவாகி நேற்று தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் ரங்கூன் திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை சாய்பல்லவி இணைந்து நடித்துள்ளார். இது வாழ்க்கை வரலாறு படம் என்பதால் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயனும், முகுந்த் வரதராஜன் மனைவி இந்து ரபெக்கா வர்கீஸாக சாய்பல்லவியும் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இந்த படத்திர்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகையை ஒட்டி நேற்று வெளியானது. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 800க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அமரன் திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தப் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இருவரின் அபரிமிதமான நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. ஜிவி பிரகாஷ் குமாரின் பாடல்களும் பின்னணி இசையும் படத்தை கதையை ரசிகளுடன் இணைப்பதாக படம் பார்த்தவர்கள் கூறுகின்றனர். இந்த சிவகார்த்திகேயன் ஆக்ஸன் கீரோவாக மக்கள் மனதில் இடம் பிடிக்கும் வகையில் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
Bringing True Heroism to the Big Screen, #Amaran Sees Massive Collections Across the Globe! #StrongerTogether#Amaran #MajorMukundVaradarajan#KamalHaasan #Sivakarthikeyan #SaiPallavi #RajkumarPeriasamy
— Raaj Kamal Films International (@RKFI) November 1, 2024
A Film By @Rajkumar_KP @ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran… pic.twitter.com/dTtrqJlQa9
இந்த நிலையில் அமரன் படத்தின் முதல்நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி அமரன் படம் உலகம் முழுவதும் சுமார் 42.3 கோடி வரை வசூல் செய்துள்ளது என்கின்றனர். இந்தியாவில் மட்டும் 25 கோடி வசூல் என்கின்றனர். தமிழகத்தில் மட்டும் 15 கோடி வரை வசூல் செய்துள்ளது. இது சிவகார்த்திகேயனின் திரை வாழ்வில் அதிகபட்ச வசூலாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இன்னும் மூன்று நாட்கள் விடுமுறை இருப்பதால் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.