சிவகார்த்திகேயன் நடித்த `மதராஸி' படத்தின் 2வது போஸ்டர் ரிலீஸ்

சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அடுத்ததாக சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் 24-வது படத்தில் நடிக்க உள்ளார். சுதா கொங்கரா இயக்கத்தில் 25- வது படமான ’பராசக்தி' படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.
The celebration isn't over yet ❤️🔥
— A.R.Murugadoss (@ARMurugadoss) February 17, 2025
Second Look poster of #Madharasi out now!
MAYHEM has a new face. DESTRUCTION has a new meaning 🔥
Title Glimpse streaming ▶️ https://t.co/BmRUfEz2Oq pic.twitter.com/xr7Yw0CR9a
இன்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு SK23 படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டது. படத்திற்கு மதராஸி என்ற தலைப்பு வைத்துள்ளனர். அதனுடன், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. திரைப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. திரைப்படத்தின் ஆடியோ உரிமையை ஜங்கிலி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்நிலையில், மதராஸி படத்தின் 2வது லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.