இலங்கையில் சிவகார்த்திகேயனின் பராசக்தி பட ஷூட்டிங்..?
1741333801000

பராசக்தி திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமரன் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் சுதா கொங்காரா இயக்கி வரும் பராசக்தி படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கினறனர். மேலும் ரவி மோகன் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, காரைக்குடி மற்றும் மதுரையில் நடைபெற்றது.
மேலும், பின், முதல்கட்ட படப்பிடிப்பு மதுரையில் நிறைவடைந்ததாக சுதா கொங்காரா தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பராசக்தியின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறவுள்ளதாகவும், அதற்காக அடுத்த வாரம் படக்குழுவினர் இலங்கை செல்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.