சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படப்பிடிப்பு வீடியோ இணையத்தில் வைரல்...

சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அமரன் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் சுதா கொங்காரா இயக்கி வரும் பராசக்தி படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கினறனர். மேலும் ரவி மோகன் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, காரைக்குடி மற்றும் மதுரையில் நடைபெற்றது.
"Caught in action! #Sivakarthikeyan looking super dashing in this fan-captured clip from the shoot! 😍 #SudhaKongara is cooking up something massive with Thaaru Maaru Sambhavam! 🎥 SK’s fit look is on point! 💪 Wishing the entire team a smashing success! 🌟 #SKFans… pic.twitter.com/hbUftpCGlL
— TamilCineX (@TamilCineX) March 12, 2025
இந்த நிலையில், பராசக்தி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.