சிவகார்த்திகேயன் பாவம், ரொம்ப டீசன்ட்டான மனிதர் - இமானின் முதல் மனைவி
சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாகவும், இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பயணிப்பது கடினம் என்றும் வெளிப்படையாக சொன்னால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும் என்றும் இமான் பேட்டி ஒன்றில் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இமானின் முதல் மனைவி பேசியிருப்பதும் தற்போது சமூக வலைதளங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கும் நிலையில், தனது முதல் மனைவி மோனிகா ரிச்சர்டை கடந்த 2021-ஆம் ஆண்டு இசை அமைப்பாளர் இமான் விவாகரத்து செய்தார். அதன்பிறகு, அமலி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அப்போதே, என்ன காரணம் என ஆச்சர்யத்துடன் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், 'சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார்' என்று இமான் பேட்டி ஒன்றில் குற்றம் சாட்டியிருக்கிறார். இதைத் தொடர்ந்து, இமான் விவாகரத்துக்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என்று சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.
இந்த சூழலில், இமானின் முதல் மனைவி ரிச்சர்ட் வார பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் கூறியது, சிவகார்த்தியேன் தங்களின் குடும்ப நண்பர்.ரொம்ப டீசண்ட்டான மனிதர் அவர். இமானுக்கும் அவருக்கு நல்ல நட்பு இருந்தது. என் மகள்களுக்கும் அவரை பிடிக்கும். அதனால் தான், எங்களுக்கு விவாகரத்து நடக்கக்கூடாது என சமாதானம் பேச வந்தார். ஒரு குடும்பம் நல்லா இருக்கனும்னு முயற்சி செய்தார் என்று கூறினார்.
மேலும், விவாகரத்து விஷயத்தில், இமான் முடிவுக்கு சிவகார்த்திகேயன் ஆதரவு தரவில்லை எனவும், நியாயமாக பேசினார் எனவும் முதல் மனைவி ரிச்சர்ட் தெரிவித்துள்ளார். இதனால், தான் இமான், சிவகார்த்திகேயன் துரோகம் செய்துவிட்டார் என அவர் மீது பழி சுமத்துவதாகவும் விளக்கம் அளித்துள்ளார். அரசியல்வாதிகளை வைத்து மிரட்டி தன்னிடம் இமான் விவாகரத்து பெற்றதாகவும் கூறினார். இது மேலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
முன்னணி இசை அமைப்பாளர், ஒரு உச்ச நட்சத்திரம் மீது புகார் சாட்டியிருப்பதும், அவரது மனைவி சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக பேசியிருப்பதும் சமூக வலைதளங்களில் விவாதத்திற்கு ஆளாகி இருக்கிறது.