நான் அடுத்த தளபதியா?... ரசிகர்கள் கோஷத்திற்கு சிவகார்த்திகேயன் கொடுத்த பதில் என்ன?
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’. ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார்.
வரும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகும் ’அமரன்’ திரைப்படம் மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் ’அமரன்’ திரைப்படம் அறிவிக்கப்பட்டது முதல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
அதே நேரத்தில் கமர்ஷியல் நாயகனாக பார்க்கப்படும் சிவகார்த்திகேயன் இந்த கதாபாத்திரத்தில் பொருந்துவாரா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி நிலவியது. ஆனால் அந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் அமரன் படத்தின் டீசரில் சிவகார்த்திகேயன் ஆக்ரோஷமான உறுதியான ராணுவ வீரராக காட்சியளித்தார்.
இதனைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு வெளியான சாய் பல்லவி கதாபாத்திர வீடியோவும் வரவேற்பைப் பெற்றது. சிவகார்த்திகேயன், சாய் பல்லவி கெமிஸ்ட்ரி ரசிகர்கள் அனைவராலும் விரும்பப்பட்டது. இந்நிலையில் அமரன் திரைப்பட குழு அமரன் பட ப்ரமோஷன் வேலைகளில் இறங்கியுள்ளது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனை பார்த்து அமரன் பட புரமோஷனில் "அடுத்த தளபதி" என ரசிகர்கள் கூச்சலிட்டனர்.
nullHey i've seen this one, This one's classic!🔥
— ꜰᴀᴢɪʟ (@SKFazil_) September 29, 2024
Maturity level of both !📈🫡 pic.twitter.com/Vvl6jwd9fc
அதற்கு நடிகர் சிவகார்த்திகேயன், “ஒதே தளபதி, ஒரே தல, ஒரே உலகநாயகன், ஒரே சூப்பர்ஸ்டார் தான். அவர்களை பார்த்து தான் நான் சினிமாவில் நடிக்க வந்தேன். அவர்களை போல கஷ்டப்பட்டு நடித்து ஜெயிக்க வேண்டும் என நினைக்கலாம், அவர்கள் இடத்தை பிடிக்க வேண்டும் என நினைப்பது தவறு” என கூறியுள்ளார்.
முன்னதாக கடந்த மாதம் வெளியான 'கோட்' படத்தில் ஒரு காட்சியில் விஜய் ஒரு காட்சியில் "துப்பாக்கியை பிடிங்க சிவா" என கூறுவார். விஜய் சினிமாத்துறையை விட்டு அரசியலுக்கு செல்லவுள்ள நிலையில், படத்தில் இடம்பெற்ற இந்த வசனம் பெரும் கவனம் பெற்றது. நடிகர் விஜய் சினிமாவில் தனது இடத்தை சிவகார்த்திகேயனுக்கு வழங்குவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.