விரைவில் சிவகார்த்திகேயனின் 'எஸ்கே 25' படப்பிடிப்பு...!

sk25

SK 25 படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் கடைசியாக அமரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதேசமயம் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது திரைப்படத்தில் நடித்த வருகிறார். மேலும் சிப்பி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 24 வது திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார். அடுத்தபடியாக சுதா கொங்கரா இயக்கத்திலும் புதிய படம் ஒன்றில் கமிட்டாகியிருக்கிறார். இந்த படமானது சிவகார்த்திகேயனின் 25 வது படமாக உருவாக இருக்கிறது. இந்த படத்திற்கு SK 25 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி வருகிறது. அது மட்டும் இல்லாமல் நடிகர் ஜெயம் ரவி இந்த படத்தில் வில்லனாக நடிக்கப் போகிறார் என்று சொல்லப்படுகிறது.

sk

ஏற்கனவே இந்த படம் சூர்யாவின் நடிப்பில் உருவாக இருந்த புறநானூறு திரைப்படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே SK 25 படம் 1965 ஆம் ஆண்டு நடந்த இந்தி திணிப்பை மையமாக வைத்து உருவாக்கப்பட இருக்கிறது. அதன்படி இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைக்க இருக்கிறார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 17ஆம் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வருகின்ற டிசம்பர் 21-ம் தேதி சென்னையில் நடைபெற இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

Share this story