சிவகார்த்திகேயனின் ‘எஸ்.கே.25’ படத்தின் முக்கிய அப்டேட் நாளை வெளியாகிறது

sk 25

சிவகார்த்திகேயன் நடித்து வரும்  ‘எஸ்.கே.25’ படத்தின் முக்கிய அப்டேட் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அமரன் படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இன்னும் பெயரிடாத படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக அவரது 25வது படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தேசிய விருது வென்ற சுதா கொங்கரா இயக்குகிறார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா நடிக்க அதர்வா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் ஜெயம் ரவியும் இணைந்திருக்க அவர் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. sk25

இப்படத்திற்கு தற்காலிகமாக ‘எஸ்.கே.25’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படம் அவருக்கு நூறாவது படமாக அமைந்துள்ளது. இந்தப் படத்திற்காக முதல் பாடலை பாடகி தீ குரலில் முன்னதாகவே பதிவு செய்துவிட்டனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் முதல் நடந்து வருகிறது. சமீபத்தில் இப்படத்திற்கு கலைஞர் திரைக்கதை மற்றும் வசனத்தில் சிவாஜி நடித்த பராசக்தி படத்தின் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை எதிர்ப்பு தெரிவித்தது. 


இந்த நிலையில் இப்படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை ஜனவரி 28ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தலைப்புடன் கூடிய டைட்டில் டீசர் குறித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் முன்பு தகவல் வெளியானது போல் இந்தி எதிர்ப்பு குறித்து இப்படம் பேசவுள்ளதால் அது சம்பந்தமான காட்சி டைட்டில் டீசரில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Share this story