சிறப்பான பரிசளித்த சிவகார்த்திகேயன் -யார் அந்த அதிர்ஷ்டசாலி தெரியுமா ?

நடிகர் சிவகார்த்திகேயனின் 24-வது படத்தை இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.இந்த இயக்குனர் இதற்கு முன்பு மணிகண்டன் நடிக்க குட் நைட் என்ற படத்தை இயக்கியுள்ளார் .ஒருவர் தூக்கத்தில் விடும் குறட்டையால் என்னென்ன பிரச்சினைகள் உண்டாகும் என்பதை மையமாக வைத்து காமெடியாக அந்த குட் நைட் படத்தை எடுத்துள்ளார் .இந்த படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று வெற்றிகரமாக ஓடியது
இந்த "குட் நைட்" படத்தின் இயக்குனர் விநாயக் சந்திரசேகரனுக்கு சிவகார்த்திகேயன் பரிசளித்திருக்கிறார். இயக்குனரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து கூறி ஒரு பரிசை சிவகார்த்திகேயன் வழங்கியுள்ளார்
இந்த பிறந்த நாள் பரிசு தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்த இயக்குனர், ''வாழ்த்துகள் மற்றும் பரிசுக்கு மிக்க நன்றி சிவகார்த்திகேயன் அண்ணா. இந்த வருட பிறந்தநாளை இது மிகவும் சிறப்பாக மாற்றியது என்று அவர் நன்றி கூறியுள்ளார்
நடிகர் சிவகார்த்திகேயனின் 24-வது படத்தை இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது .
தந்தை-மகன் பிணைப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக இருப்பதாக கூறப்படும் இப்படத்தில் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்க மோகன்லாலுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது .இந்த இயக்குனருக்கு பிறந்த நாள் பரிசாக இந்த படம் அமைந்துள்ளது மேலும் சிறப்பை கொடுத்துள்ளது .