கல்வியை கொடுத்தால் தலைமுறையே முன்னேறும் - நடிகர் கார்த்தி

ஒருவருக்கு கல்வியை கொடுத்தால் அவரது தலைமுறையே முன்னேறும் என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
பழம்பெரும் நடிகர் சிவகுமார் தனது 100வது படத்தின் போது கல்வி அறக்கட்ட ஒன்றை தொடங்கினார். இந்த அறக்கட்டளை மூலம் ஏராளமான மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 44வது ஆண்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி, கல்வியின் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரிகிறது. அதனால் குறைந்த சம்பளம் வாங்கும் பெற்றோர் கூட குழந்தைகளை படிக்க வைக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். அந்த அளவிற்கு கல்வி என்பது அவசியம். ஒருவன் படித்தால் அவருடைய தலைமுறையே நன்றாக இருக்கும்.
கல்வியை கொடுத்துவிட்டால் அதைவிட பெரிய செல்வம் எதுவும் கிடையாது. கல்வியை கொடுத்தால் ஒரு தலைமுறையே முன்னுக்கு வரும். அதற்கு இந்த தலைமுறையே உதாரணம். மாணவர்கள் எதையம் சாதிக்கமுடியும். உங்கள் கவனத்தை திசை திருப்பாதீர்கள் என்று கூறினார்.