சாதி மதத்தை கடந்து வாழ்க்கையை புரிந்துக்கொள்ளுங்கள் - மாணவர்களுக்கு நடிகர் சூர்யா அறிவுரை !

சாதி மதத்தைக் கடந்து வாழ்க்கையை மாணவர்கள் புரிந்துக் கொள்ளவேண்டும் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக இருக்கும் சிவகுமார், அவர்களது மகன்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் சிவகுமார் கல்வி அறக்கட்டளை மூலம் பல்வேறு உதவிகள் ஏழை, எளிய மாணவர்களுக்கு சென்றடைந்து வருகிறது.
இந்நிலையில் சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 44-ஆம் ஆண்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 12-ஆம் வகுப்பு மாணவர்கள் 25 பேருக்கு தல 10 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட்டது. இந்த தொகையை நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் வழங்கினர்.
இந்த நிகழ்வில் பேசிய நடிகர் சூர்யா, மாணவர்கள், சாதி மதத்தை கடந்து வாழ்க்கை புரிந்துக் கொள்ளவேண்டும். பிறரை பழி சொல்லுதல், எதிர்மறையாக பேசுவதை குறைத்து கொள்ளுங்கள். பழி சொல் பேசிவிட்டார்கள் என்பதற்காக உங்கள் முழு நாளை வீணடிக்காதீர்கள். கல்வி மூலமாக வாழ்க்கையையும், வாழ்க்கை மூலமாக கல்வியையும் படியுங்கள். உங்கள் வாழ்க்கை முழுவதும் கல்வி தேவை. மதிப்பெண் மட்டுமே கல்வி அல்ல. கடந்த 3 ஆண்டுகளில் தமிழக அரசுடன் இணைந்து 1 லட்சம் மாணவர்களுக்கு உதவ முடிந்திருக்கிறது என்று கூறினார்.