அடங்கமாட்டியாமா நீ……- ஷிவானி நாராயணனை கழுவி ஊற்றும் நெட்டிசங்கள்.
இணையவாசிகளின் கனவு கன்னியாக வலம் வரும் நடிகை ஷிவானி நாராயண் செய்த செயலால், கோபடமைந்த நெட்டிசங்கள் அவரை கண்டபடி திட்டி வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு தொடர் மூலமாக பிரபலமான நடிகை ஷிவானி. தொடர்ந்து கடைகுட்டி சிங்கம், ரெட்டை ரோஜா என பல சீரியல்களில் நடித்தார். என்னதான் சீரியல் நடிகையாக இருந்தாலும் இவர் இன்ஸ்டாவில் போடும் புகைப்படங்கள், ரீல்ஸ் இவற்றை மட்டும் பார்க்கவே தனி கூட்டமே உண்டு. அந்த வகையில் மக்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் பிரபலமானவர் ஷிவானி. தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஷிவானிக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மனைவி, வீட்டுல விசேஷம், நாய் சேகர் ரிட்டன்ஸ் என பல படங்களில் துணைக் கதாப்பாத்திரத்தில் நடித்தார். இந்த நிலையில் மக்களின் வாழ்கையை புரட்டி போட்ட மிக்ஜாம் புயலில் குட்டை டவுசர் அணிந்து ஷிவானி மழைசாரலை ரசித்து போட்ட வீடியோவால் கோபடைந்த நெட்டிசங்கள் அவரை ரோஸ்ட் செய்து வருகின்றனர். சாப்பாடு, தண்ணீர் இல்லாம அனைவரும் கஷ்டப்பட இப்படி ஒரு வீடியோ தேவையா ஷிவானி என கடுமையாகசாடி வருகின்றனர்.