டல்ஹௌசி பிரபு,பழ கருப்பையா நடிக்கும் சிவப்பு நட்சத்திரம் -டைட்டில் ரிலீஸ் செய்தது யார் தெரியுமா ?

samuthra kani

லீஹரி பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் ‘சிவப்பு நட்சத்திரம்’. படத்தின் டைட்டிலை, நடிகர் சமுத்திரக்கனி தனது சமுக வலைதளங்களில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். இயற்கை வளங்கள் அனைத்தும் மனித குலத்தின் பசியை தீர்ப்பதற்கு தான். மாறாக பணம் படைத்தவர்கள் அதனை பதுக்கி வைத்து செயற்கையாக பஞ்சத்தை உருவாக்குவதற்கு அல்ல என்ற கருவை சுமந்து வரும் படம் இது.
நாயகனாக டல்ஹவுசி பிரபு நடிக்கிறார். நாயகியாக வர்ஷா நடிக்கிறார். பொன்வண்ணன், ஓஏகே. சுந்தர், நீதிபதியாக பழ கருப்பையா, வில்லன்களாக சித்தார்த், தீரன், பாலமுருகன், டெல்டா வீரா ஆகியோர் நடிக்கிறார்கள். எழுதி, டல்ஹௌசி பிரபு இயக்குகிறார். ஒளிப்பதிவு பிகே, இசை டி.சி, இணை தயாரிப்பு கர்ணா, டாக்டர் தினேஷ். லீஹரி பிக்சர்ஸ் சார்பில், பி.சின்னத்தம்பி, ஹரி சங்கர் தயாரிக்கின்றனர்

Share this story