விஜய் ஆண்டனி ரசிகனாக மாறிய சிவராஜ் குமார் -எதனால் தெரியுமா ?

vijay antony
சென்னையில் நடைபெற்ற தமிழ்ப் பதிப்பு முன் வெளியீட்டு நிகழ்ச்சியில், பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். டாக்டர் சிவராஜ்குமார் அவர்களின் அர்ப்பணிப்பு, உபேந்திரா மற்றும் ராஜ் B. ஷெட்டியின் நடிப்பு, அர்ஜுன் ஜான்யாவின் இயக்கம் ஆகியவற்றை விஜய் ஆண்டனி பாராட்டினார்.
நடிகர் சிவராஜ்குமார் பேசியதாவது…
நான் விஜய் ஆண்டனி ரசிகன். அவர் சினிமாவில் எல்லா வேலையும் செய்துள்ளார். அவரின் பிச்சைக்காரன் படத்தின் ரீமேக் வாய்ப்பு எனக்கு வந்தது; ஆனால் அதை மிஸ் செய்து விட்டேன். மீண்டும் அவரின் வேறு படத்தில் நடிக்கக் காத்திருக்கிறேன்.
வின்செண்ட் சின்ன வயதிலிருந்து என் நண்பர்; அவர் என் சகோதரர் போலத்தான். ரமேஷ் ரெட்டிக்கு என் நன்றி. அறிமுக இயக்குநருக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு தந்துள்ளார். நான் தான் முதலில் கதை கேட்டேன்; என்னை நம்பி பெரிய செலவு செய்துள்ளார்.
அர்ஜுன் ஜான்யா இப்படத்தில் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்துள்ளார். என்னிடம் கதை சொன்ன போது எல்லா கேரக்டர்களையும் நடித்தே காட்டிவிட்டார். இப்போது இயக்குநராகியுள்ளார்; விரைவில் நடிகராக ஆகிவிடுவார்.

Share this story