வீர தீர சூரன் படத்திலிருந்து வெளியான எஸ். ஜே. சூர்யா பர்ஸ்ட் லுக்.. ரசிகர்கள் வரவேற்பு !

sj suriya


இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமான எஸ். ஜே. சூர்யா சமீபகாலமாக படங்களை இயங்குவதை விட நடிப்பதில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அவர் கைவசமாக ராயன், வீர தீர சூரன், சூர்யாவின் சனிக்கிழமை, கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் உள்ளன. சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வீர தீர சூரன்'. இதில் எஸ்.ஜே.சூர்யா,சுராஜ் வென்ஜாரா, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.சிபு தமின்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசையமைக்கின்றார். இந்நிலையில் எஸ்.ஜே. சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்திலிருந்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டனர். 

S J suriya
அதில் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளதால் ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


 

Share this story