அஜித் என் வழிகாட்டி -எஸ்.ஜே.சூர்யா மகிழ்ச்சி
விடாமுயற்சி படத்துக்கு அடுத்ததாக நடிகர் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' என்ற படத்தில் நடித்து வருகிறார்.படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் மோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. ஆக்ஷன் படமாக இந்த படம் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.படத்தில் அவருடன் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்து வருகிறார். வாலி படத்தில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித் இரட்டை கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்.அஜித்துக்கு இந்த படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு எஸ்.ஜே.சூர்யா, அஜித்துடன் `குட் பேட் அக்லி' படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் படப்பிடிப்பு இடைவேளையில் அஜித்தை எஸ்.ஜே.சூர்யா திடீரென சந்தித்துள்ளார். அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் Happiest movement after so many years with my Mentor # AK The Great என பதிவிட்டுள்ளார்.