‘உண்மை நடக்கும் பொய் பறக்கும்’ வெளியானது எஸ் ஜே சூர்யாவின் 'வதந்தி' வெப்சீரிஸ் டிரைலர்.

photo

எஸ் ஜே சூர்யா நடிகர், வில்லன், குணச்சித்திர நடிகர் என வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். என்ன தான் இவர் பல காதாபாத்திரத்தில் நடித்தாலும் 'வில்லன்' கேரக்டர் தான் இவருக்கு பக்காவாக சூட் ஆவதாக பல ரசிகர்களும் கூறிவருகின்றனர். இந்த நிலையில் எஸ் ஜே சூர்யா தற்பொழுது முதல் முறையாக வெப்சீரிஸில்  அறிமுகமாகியுள்ளார்.

photo

photo

புஷ்கர் மற்றும் காயத்ரி இருவரும் இணைந்து தயாரிக்கும்" வதந்தி - The Fable of velonie" எனும் வெப் சீரிஸில் கதாநாயகனாக மிரட்டலான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் எஸ் ஜே சூர்யா. கொலைகாரன் படத்தின் இயக்குனரான  ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் இந்த படத்தில் லைலா, நாசர், விவேக் பிரசன்னா, குமரன் மற்றும் ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர்.

photo

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளிலும் வெளியாக உள்ள இந்த வெப்சீரிஸ் வரும் டிசம்பர் 2-ம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த வெப்சிரீஸின் சஸ்பென்ஸ் திரில்லரான டிரைலர் வெளியாகியுள்ளது.


 

Share this story