ஒரு வழியாக ரிலீசாகும் ‘பொம்மை’... எஸ்ஜே சூர்யா படத்தின் அறிவிப்பு !

எஸ்ஜே சூர்யாவின் ‘பொம்மை’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ‘பொம்மை’ திரைப்படம் உருவாகியுள்ளது. எஸ்.ஜே.சூர்யாவின் மாறுப்பட்ட நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் நீண்ட நாட்களான வெளியாகாமல் இருந்தது. தற்போது ஒரு வழியாக ரிலீசுக்கு இப்படம் தயாராகிவிட்டது.
இதையொட்டி இப்படத்தின் ரிலீஸ் தேதி அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் ஜூன் 16-ஆம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சைக்கோ ரொமான்டிக் த்ரில்லரில் உருவாகியுள்ள இப்படத்தை ஏஞ்சல் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முன்னணி இயக்குனர் ராதாமோகன் இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.