சைக்கோ த்ரில்லர் படத்தில் எஸ்ஜே சூர்யா... 'பொம்மை' 2வது டிரெய்லர் வெளியீடு !

எஸ்ஜே நடிப்பில் உருவாகியுள்ள 'பொம்மை' படத்தின் 2வது டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
சைக்கோ திரில்லரில் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பொம்மை'. பிரபல இயக்குனரும், நடிகரமான எஸ்ஜே சூர்யா இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை முன்னணி இயக்குனர் ராதாமோகன் இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் இந்த படத்தின் பாடல்கள் உருவாகியுள்ளது.
இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரொமான்டிக் த்ரில்லரில் உருவாகியுள்ள இப்படத்தை ஏஞ்சல் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது. நீண்ட நாட்களாக தயாரிப்பு பணியில் உள்ள இந்த படம் வரும் ஜூன் 16-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் இரண்டாவது டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.