வெப் தொடரில் நடித்துள்ள எஸ்.ஜே.சூர்யா... ‘வதந்தி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு !

vadhandhi

 எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள வதந்தி வெப் தொடரின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களாக இருக்கும் புஷ்கர் - காயத்ரி, விஜய் சேதுபதி - மாதவன் இணைந்து நடித்து சூப்பர் ஹிட் படமான ‘விக்ரம் வேதா’ படத்தின் மூலம் பிரபலமானவர்கள். இவர்கள் தற்போது தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே இவர்கள் தயாரிப்பில் வெளியான ‘சுழல்’ வெப் தொடர் நல்ல வரவேற்பை பெற்றது. 

vadhandhi

இதையடுத்து பிரபல இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவை வைத்து ‘வதந்தி’ என்ற வெப் தொடரை தயாரித்துள்ளனர். இதன் மூலம் முதல்முறையாக எஸ்.ஜே.சூர்யா வெப் தொடரில் நடிக்கிறார். இந்த வெப் தொடரை ஆன்ட்ரியூ லூயிஸ் என்பவர் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ‘லீலை’ என்ற வெப் தொடரை இயக்கியவர். இந்த வெப் தொடரில் லைலா, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இந்நிலையில் இந்த தொடர் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் தமிழை தவிர, தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. 

 

 

Share this story