விக்ரம் படத்தில் இணைந்த நடிகர் எஸ்.ஜே.சூர்யா
விக்ரம்,பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்குப் பிறகு பா ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். இவருடன் இணைந்து மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டஜிரோனோ மற்றும் பலர் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு ஜனவரி 26-ம் தேதி இத்திரைப்படம் வெளியாகிறது. இதையடுத்து, விக்ரம் நடிக்கும் 62-வது படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியானது. இந்த படத்திற்கு சியான் 62 என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இந்த படத்தை இயக்குகிறார்.
இந்நிலையில், இப்படத்தில் பிரபல நடிகர் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.