10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கும் எஸ்.ஜே.சூர்யா..!!

10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ‘கில்லர்’ படம் மூலம் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
1999ல் அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘வாலி’படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக கால் பதித்தார் எஸ்.ஜே.சூர்யா. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஜய்யை வைத்து 'குஷி' படத்தை இயக்கினார். அடுத்தடுத்த படங்களின் வெற்றி மூலம் தன்னை தவிர்க்க முடியாக இயக்குநராக நிலைநிறுத்திக்கொண்ட எஸ்.ஜே.சூர்யா, அதனைத்தொடர்ந்து ‘நியூ', ‘அன்பே ஆருயிரே' போன்ற படங்களை இயக்கி தானே கதாநாயகனாகவும் களம் இறங்கினார். எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் கடைசியாக 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘இசை’. இந்தப்திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாததால், அதன்பிறகு தொடர்ந்து படங்கள் இயக்குவதை தவிர்த்துவிட்ட அவர், முழுநேர நடிகராகவே மாறிவிட்டார்.
அடுத்தடுத்து பல படங்களில் வில்லனாக நடித்து தனது தனித்துவமான நடிப்பில் ரசிகர்களை கவர்ந்துவிட்டார். இத்தனை நாள் ஏன் தலைவா இப்படி நடிக்காம போயிட்டீங்க என ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு நடிப்பில் அசத்தி வருகிறார். இருப்பினும் அரவது ரசிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, மீண்டும் எப்போது படம் இயக்கப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர். தற்போது அந்த எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் விதமாக , 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
தற்போது அந்தப்படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. ‘கில்லர்’ என பெயரிடப்பட்டுள்ள அந்தப்படத்தை இயக்கி, அதில் அவரே ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஸ்ரீ கோகுலம் மூவீஸ் தயாரிக்கும் இந்தப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகும் என கூறப்பட்டுள்ளது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழு
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எஸ்.ஜே.சூர்யா, “உங்கள் எஸ்.ஜே.சூர்யா மீண்டும் இயக்குநராக வருகிறேன், அதுவும் என் கனவு திரைப்படமான ‘கில்லர்’ மூலம். கோகுலம் மூவிஸ் நிறுவனத்துடன் இணைவதில் மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறேன். உங்கள் அன்பும், ஆதரவும் எப்போதும் தேவை” என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே ‘கில்லர்’ திரைப்படம், எஸ்.ஜே.சூர்யாவின் முந்தைய திரைப்படமான ‘நியூ’ படத்தின் இரண்டாம் பாகம் போன்று இருக்கும் என்று சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Hi folks , Ur Director S.J.Suryah is bk 🥰🥰🥰 with His Dream project titled, Yah U know it 🔥🔥🔥#KILLER🔥🔥🔥 feeling blessed and happy to collaborate with the most prestigious @GokulamMovies Gokulam Gopalan sir 🥰🥰🥰🥰 need Ur love and support as always🥰🥰🥰 love U all 🙏SJS… pic.twitter.com/XlLK5GY3Jb
— S J Suryah (@iam_SJSuryah) June 27, 2025