SK meets Thalapathy - வைரலாகும் கோட் படத்தின் க்யூட் வீடியோ
1728205229000
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகிய படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மோகன், சினேகா,யோகி பாபு, பிரேம்ஜி, மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 5 ஆம் தேதி வெளியாகி மக்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். திரைப்படம் குடும்பங்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. திரைப்படம் சமீபத்தில் ஓடிடி-யில் வெளியானது. ஓடிடி யிலும் மக்கள் பார்த்து கொண்டாடி வருகின்றனர். படத்தின் OST Audio Jukebox - ஐ படக்குழு நேற்று வெளியிட்டது. திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார். தற்பொழுது அவரது காட்சிகள் படமாக்கப்படும் பொழுது எடுக்கப்பட்ட வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அப்பொழுது விஜய் சிவகார்த்திகேயனுக்கு ஒரு வாட்சை சிறப்பு பரிசாக கொடுத்துள்ளார். இவர்கள் இருவரும் மாற்றி கிண்டலடித்துக் கொள்கின்றனர். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
When #SK meets #Thalapathy , you know it’s going to be legendary! 🔥
— AGS Entertainment (@Ags_production) October 5, 2024
You asked and we delivered ♥️#TheGoatBTS@actorvijay Sir @Siva_Kartikeyan
A @vp_offl Hero
A @thisisysr Magical #TheGreatestOfAllTime#ThalapathyIsTheGOAT#KalpathiSAghoram#KalpathiSGanesh… pic.twitter.com/V60XCbTyzO

