'சிவகார்த்திகேயன்' தயாரிக்கும் அடுத்த படம் குறித்த அசத்தல் அப்டேட்.

photo

நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கி நடிகர், தயாரிப்பாளராக வளர்ந்துள்ளார். இந்த நிலையில் இன்று சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் தயாராகவுள்ள அடுத்த படம் குறித்த அசத்தல் அப்டேட் வெளியாகியுள்ளது.

photo

சிவகாரித்திகேயனின் எஸ் .கே புரொடக்ஷனின் தயாரிப்பில் முதலாவதாக ஐஸ்வரியா ரஜேஷ் நடிப்பில் ‘கனா’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, வாழ், டாக்டர், டான் ஆகிய படங்களை தயாரித்தனர். இதன் வரிசையில் ஆறாவது திரைப்படம் வெளியாகவுள்ளது, அதன் டைட்டில் ஃபஸ்ட்லுக் நாளை காலை 10மணிக்கும், ஃபஸ்ட்லுக் டீஸ் மாலை 5மணிக்கும் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்து அதற்கான போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

photo

அந்த போஸ்டரில் சேவல் இடம்பெற்றுள்ளது, இதை வைத்து பார்த்தார் ஒருவேளை கிராமத்து கதைகளம் அல்லது சேவல் சண்டை கதைக்களம் கொண்ட திரைப்படமாக இருக்க வாய்ப்புள்ளது. தொடர்ந்து படத்தின் இயக்குநர், நடிகர், நடிகைகள் யார் என்பது பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Share this story