‘மேஜர் முகுந்த் வரதராஜனாக’ நடிக்கும் ‘சிவகார்த்திகேயன்’ – எகிறும் எதிர்பார்ப்பு!

photo

கோலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சிவகார்த்திகேயன், மாவீரன் படத்தின் வெற்றிக்கு பிறகு கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அந்த படம் பற்றிய சூப்பர் தகவல் ஒன்று வந்துள்ளது.

photo

அதாவது, ஏற்கனவே வந்த தகவல்படி சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிப்பதாக கூறப்பட்டது இந்த நிலையில்  அது யாருடைய கதை என்பது தெரியவந்துள்ளது. அதாவது கடந்த 2014ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு மூன்று தீவிரவாதிகளை கொன்றுவிட்டு வீரமரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று படத்தில்தான் நடித்துவருகிறாராம்.

photo

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்கிறார். தற்போது படப்பிடிப்பு கஷ்மீரில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படம் சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்வில் முக்கியமான ஒரு படமாக இருக்கும். தொடர்ந்து படம் குறித்த அப்டேட் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story