‘சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்கள்... ஓடிடி நிறுவனங்கள் கண்டுக்கொள்வதில்லை - பா ரஞ்சித் !

pa ranjith
 சிறிய பட்ஜெட் திரைப்படங்களை ஓடிடி தளங்களில் விற்பது மிகவும் கடினமாக இருப்பதாக இயக்குனர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார். 

பா ரஞ்சித்தின் நீலம் புரொக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘பொம்மை நாயகி’. யோகிபாபுவின் வித்தியாசமான நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் ஷான் இயக்கியுள்ளார். தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரம் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. 

pa ranjith

இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு பேசிய இயக்குனர் பா ரஞ்சித், ஓடிடி நிறுவனங்களின் வருகைக்கு பிறகு சின்ன பட்ஜெட் திரைப்படங்களுக்கு வரவேற்பு இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை மாறி ஓடிடி நிறுவனங்களுக்கு சிறிய பட்ஜெட் படங்களை விற்பது கடிமையாக உள்ளது. 

pa ranjith

ஒரு வருடத்திற்கு முன்னணி ஓடிடி நிறுவனங்கள் 12 திரைப்படங்கள் வாங்குகின்றனர் என்றால், அந்த 12 படமும் முன்னணி நடிகர்களின் படங்களாக தான் இருக்கின்றன. ஒரு படத்தை ஓடிடியில் விற்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதேபோன்று சிறிய படங்களுக்கு தியேட்டர்களில் திரைகள் கிடைப்பதில்லை.  சமீபத்தில் வெளியான ‘லல் டுடே’ படத்தை தவிர சிறிய படங்களுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்று கூறினார். 

 

 

Share this story