80ஸ் பில்டப் படத்திலிருந்து ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு
1700642339235
ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில், பிரபுதேவாவின் குலேபகாவாலி, ஜோதிகாவின் ஜாக்பாட் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் கல்யான் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘80ஸ் பில்டப்’. இந்த படத்தில் சந்தானத்துடன் இணைந்து ராதிகா பிரீத்தி, கே எஸ் ரவிகுமார், முனீஷகாந்த், ரெடின் கிங்ஸ்லி, ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க காமெடி கதைக்களத்தில் தயாரான இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அண்மையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், படத்திலிருந்து ஸ்னீக் பீக் காட்சி ஒன்று வெளியாகி உள்ளது. பில்டப் திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.