இறைவன் படத்திலிருந்து ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு

இறைவன் படத்திலிருந்து ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு

ஜெயம் ரவி நடித்துள்ள இறைவன் திரைப்படத்திலிருந்து ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது.

ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இறைவன்.  'வாமனன், 'என்னென்றும் புன்னகை', 'மனிதன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். படத்தில் நயன்தாராவுடன், நரேன், விஜயலட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தனி ஒருவன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ஜெயம்ரவி - நயன்தாரா ஜோடி நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்நிலையில், படத்திலிருந்து ஏற்கனவே 3 பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. வரும் 28-ம் தேதி இறைவன் திரைப்படம் வெளியாகிறது
 

Share this story