"பொன்னியின் செல்வன் 2": படப்பிடிப்பிற்கு வெளியிலும் திரிஷாவை அக்கா என்று தான் அழைப்பேன்! – மனம் திறந்த 'சோபிதா துளிபாலா'! ​​​​​​​

photo

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் புரொமோஷன் பணிகள் வேகமெடுத்துள்ளன.  படத்தின் நடித்த அனுபவம் குறித்து பல நடிகர்  நடிகைகளும் கூறிவரும் நிலையில்; படத்தில் வானதி கதாப்பாத்திரம் ஏற்று நடித்துள்ள சோபிதா துளிபாலா, சுவாரசியமான பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.

photo

ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், அஷ்வின், ரஹ்மான் என இப்படியொரு மாஸ்ஸான நட்டத்திர பட்டாளம் பணிபுரிந்த படத்தில் தனது அனுபவத்தை பிரபல ஊடகம் ஒன்றுடன் பகிர்ந்துள்ளார் சோபிதா, அதில் அவர் கூறியதாவதுநடிகை ஐஸ்வர்யா ராய் உடன் எந்த காட்சியும் இல்லை என்றாலும் அவரை நான் ரசித்தேன், அவர் அழகு, அன்பு மற்றும் அரவணைப்பு நிறைந்தவர்; மேலும் திரிஷா பற்றி கூறுகையில், திரிஷா உடனான தனது காட்சி முடிந்தாலும் கூட அவரை நான் அக்கா என்றுதான் அழைக்க பழகி கொண்டேன், வெளியில் சென்றாலும் அவரை அப்படிதான் அழைப்பேன்.  நான் சிறப்பாக நடித்தால் என்னை முதலில் பாராட்டுவது திரிஷா தான் என அவருடனான தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

photo

தொடர்ந்து பேசிய அவர், ஜெயம் ரவியுடன் நடித்த தருணம் சிறப்பாக இருந்தாகவும், அவர் ஒரு வேடிக்கையான மனிதர் என்றும் கூறியுள்ளார்.

Share this story