தீ விபத்தில் காயமடைந்த மகனை .. சிங்கப்பூரிலிருந்து அழைத்து வந்த பவன் கல்யாண்...!

pawan kalyan


தீ விபத்தில் சிக்கிய மகன் மார்க்கை, ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் சிங்கப்பூரில் இருந்து ஹைதராபாத்துக்கு அழைத்து வந்தார்.  

ஜன சேனா கட்சித்தலைவரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாணின் மகன் மார்க் ஷங்கர், சிங்கப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் நிலையில், கடந்த 8 ஆம் தேதி அந்த பள்ளியில் தீ விபத்து நேரிட்டது. இதில் 19 மாணவர்கள் காயமடைந்தனர். மார்க் ஷங்கரின் கை மற்றும் கால்களிலும் தீக்காயம் ஏற்பட்டது. மகனுக்கு காயம் ஏற்பட்டதை அறிந்த பவன் கல்யாண் சிங்கப்பூருக்கு சென்று மகனுடன் இருந்தார்.

 



இந்த நிலையில், மருத்துவ சிகிச்சை முடிந்து மகனை பவன்கல்யாண், ஹைதராபாத்துக்கு அழைத்து வந்தார். அப்போது தந்தையை அன்பாக பற்றிக்கொண்ட மார்க், பாசத்துடன் கட்டிப்பிடித்தபடி சென்றார். காயத்தில் இருந்து மீண்ட தனது குழந்தையை பவன்கல்யாண் அழைத்துச்செல்லும் வீடியோவை அவரின் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். 

Share this story