கவர்ச்சி நடிகை என்ற பெயர் வலியை கொடுக்கும் - சோனா ஹைடன்
1697539838081

அஜித்தின் 'பூவெல்லாம் உன் வாசம்' திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சோனா ஹைடன். இதைத் தொடர்ந்து, குசேலன், அழகர் மலை உட்பட பல படங்களில் அவர் நடித்துள்ளார்.
கடந்த 20 வருடங்களில் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்த சோனா, தற்போது தனது வாழ்க்கைக் கதையை 'ஸ்மோக்' என்ற பெயரில் இணைய தொடராக இயக்குகிறார். ஷார்ட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக இத்தொடரை அவர் இயக்குகிறார்.
இது தொடர்பாக பேட்டி அளித்த அவர், கடந்த 10 வருடங்களாக தனது வாழ்க்கை வரலாற்றை படமாக்குவது குறித்து திட்டமிட்டதாகவும், அதற்கு தற்போது தகுந்த நேரம் அமைந்துள்ளதாகவும் கூறினார். கவர்ச்சி நடிகை என்ற பெயர், அதிக வலியை கொடுத்தது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், படத்தில் புதியவர் ஒருவரை இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்த இருப்பதாகவும் அவர் கூறினார்.