தெலுங்கில் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா...!

sonakshi

சோனாக்ஷி சின்ஹா, தான் நடித்து வரும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். 

2010ல் ஹிந்தியில் சல்மான் கான் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'தபாங்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சோனாக்ஷி சின்ஹா. பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் தான் இவர்.. 2014ல் ரஜினிகாந்த் நடித்த 'லிங்கா' திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பிறகு அவர் வேறு எந்த தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் நடிக்காமல் ஹிந்தியில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வந்தார் சோனாக்ஷி..sonakshi

இந்த நிலையில் தற்போது தெலுங்கில் முதல் முறையாக 'ஜடாதரா' என்கிற படத்தின் மூலம் நுழைந்துள்ளார் சோனாக்ஷி சின்ஹா. வெங்கட் கல்யாண் என்பவர் இயக்கி வரும் இந்த படத்தை ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. நடிகை ஷில்பா சிரோத்கர் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. தனது முதல் தெலுங்கு திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற மகிழ்ச்சியை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார் சோனாக்ஷி சின்ஹா.

Share this story