வித்தியாசமான கேங்ஸ்டர் கதையில் ‘சூது கவ்வும் 2’.. மோஷன் போஸ்டர் வெளியீடு !

SoodhuKavvum2

 மிர்ச்சி சிவா நடிக்கும் ‘சூது கவ்வும்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

கடந்த 2013 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சூது கவ்வும்’. இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் சஞ்சிதா ஷெட்டி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், ரமேஷ் திலக், கருணாகரன், ராதாரவி மற்றும் எம். எஸ். பாஸ்கர் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் வழக்கமான படம் போன்று இல்லாமல் மாறுபட்டு இருந்தது. இந்த படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு இல்லாமலும், பின்பு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

SoodhuKavvum2

இந்த படம் வெளியாகி 10 ஆண்டுகள் கழித்து இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.  இந்தபடத்தை இயக்குநர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் சிவாவுடன் இணைந்து கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கியது. 

SoodhuKavvum2

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருக்குமரன் என்டர்டெயின்மைண்ட் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கட்டுக்கட்டாக பணத்துடன் இருக்கும் அந்த மோஷன் போஸ்டர் வரவேற்பை பெற்றுள்ளது. 


 

Share this story