சூது கவ்வும் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு...!

soodhu kavum

மிர்ச்சி சிவா நடிக்கும் ‘சூது கவ்வும் 2’ படத்தின் சிறப்பு தகவலை நாளை காலை 11 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் 'சூது கவ்வும்'. இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். டார்க் காமெடி பாணியில் உருவான இந்த படம் விமர்சன  ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூது கவ்வும் படத்தின் அடுத்த பாகம் உருவாகிறது. 'சூது கவ்வும் 2' படத்தை இயக்குனர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்குகிறார். இதில் விஜய்சேதுபதிக்கு பதிலாக நடிகர் 'மிர்ச்சி' சிவா நடிக்கிறார். இந்த படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தியாகராஜன் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி. குமார் இணைந்து தயாரிக்கின்றனர்.இந்த படத்துக்கு கார்த்திக் கே தில்லை ஒளிப்பதிவு செய்கிறார். எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைக்கிறார். இக்னேஷியஸ் அஸ்வின் படத்தொகுப்பு செய்கிறார். சமீபத்தில் 'சூது கவ்வும் 2' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல் வெளியாகி கவனம் பெற்றது. 'சூது கவ்வும் ' படத்தின் பின்னணி இசையில் பெரும் வரவேற்பைப் பெற்றது . 

 


 


' இந்த நிலையில், இப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என அறிவிப்பு ஏற்கன வெளியான நிலையில் வெளியிட்டு தேதி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'சூது கவ்வும் 2 - நாடும் நாட்டு மக்களும்' படம் அடுத்த மாதம் 13-ந்தேதி வெளியாகிறது. 

 

Share this story