விரைவில் எல்.கே.ஜி.2, மூக்குத்தி அம்மன் 2 - ஆர்ஜே.பாலாஜி
பிரபல ஆர்ஜேவான பாலாஜி, சினிமா நடிகராகி தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ‘வீட்ல விசேஷம்’ படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது ‘சிங்கப்பூர் சலூன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜி சலூன் தொழிலாளியாக நடித்துள்ளார். இந்த படத்தை இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜூங்கா ஆகிய படங்களை இயக்கிய கோகுல் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஷிவானி நாராயணன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சத்யராஜ், லால், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதோடு ‘லியோ’ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேசன் இப்படத்தை தயாரித்து உள்ளார்.
இத்திரைப்டம் கடந்த 25-ம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றது. இதன் வெற்றி விழாவில் பேசிய அவர் ஆர்ஜே.பாலாஜி, மூக்குத்தி அம்மன் படத்தின் 2-ம் பாகத்தையும், எல்.கே.ஜி. படத்தின் 2-ம் பாகத்தையும் இயக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.