சூரி ஹீரோவாக நடிக்கும் 7வது படம் -யார் இயக்குனர் தெரியுமா ?

soori


மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி, ஒய்.ரவிசங்கர் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் சூரி ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தை ‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ ஆகிய படங்களை எழுதி இயக்கியிருந்த ஆர்.ரவிக்குமார் எழுதி இயக்குகிறார். சூரி ஹீரோவாக நடிக்கும் 7வது படம் இது. முன்னதாக ‘விடுதலை 1’, ‘விடுதலை 2’, ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’, ‘மாமன்’, ‘மண்டாடி’ ஆகிய படங்களில் சூரி ஹீரோவாக நடித்திருந்தார்.

இப்படங்கள் ஹிட்டாகி வசூலிலும் சானை படைத்தன. புதிய படம் குறித்து நவீன் யெர்னேனி கூறுகையில், ‘தமிழில் நாங்கள் தயாரித்த ‘குட் பேட் அக்லி’, ‘டியூட்’, ‘மொத ராத்திரி’, ‘இருமுடி’ ஆகிய படங்களுக்கு கிடைத்த வெற்றியும், வரவேற்பும்தான், தொடர்ந்து தமிழில் படங்களை தயாரிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை எங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. படத்துக்கான பூஜையில் சிவகார்த்திகேயன் பங்கேற்றார்.

அவருக்கும், சூரிக்குமான நட்பையும், அன்பையும் பார்த்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது’ என்றார். ஆர்.ரவிக்குமார் கூறும்போது, ‘கமர்ஷியல் ஹீரோவாக சூரி ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். அவரது திறமைகள் மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு நிறைவேற்றும் வகையில், அவரை திரையில் காட்ட வேண்டிய கூடுதல் பொறுப்பு எனக்கு இருக்கிறது’ என்றார். இப்படத்தில் சூரி ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்கிறார். இதர விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகும்.

Share this story