மண்டாடி வெற்றிக்கு பின் சூரி நடிக்கும் படங்களின் பட்டியல்

soori

ஜி.வி.பிரகாஷ் குமார், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் வெளியான ‘செல்ஃபி’ என்ற படத்தை எழுதி இயக்கியிருந்த வெற்றிமாறன் உதவியாளர் மதிமாறன் புகழேந்தி, தற்போது எழுதி இயக்கியுள்ள படம் ‘மண்டாடி’. இதில் சூரி, சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்திருந்தார். எல்ரெட் குமார் தயாரிக்க, வெற்றிமாறன் படைப்பாக்க தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். இப்படம் கடலில் நடக்கும் பாய்மர படகு போட்டியை மையமாக கொண்டு உருவானது. நேற்று திரைக்கு வந்த இப்படம், சூரியின் ரசிகர்களை மட்டுமின்றி, அனைத்து தரப்பினரையும் பெரிதும் கவர்ந்துள்ளது. இந்நிலையில், சென்னையிலுள்ள தியேட்டருக்கு சென்றிருந்த சூரியும், மஹிமா நம்பியாரும் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.

சூரி கூறுகையில், ‘மக்களின் பேராதரவை நேரில் பார்த்த பிறகு நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். அதேவேளையில், எனது அடுத்தடுத்த படங்களையும் வித்தியாசமாகவும், நேர்த்தியாகவும் தர வேண்டும் என்ற பொறுப்புணர்வும் அதிகரித்துள்ளது. அடுத்து ‘அயலான்’ ஆர்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறேன். ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி ஆகியோருடன் நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ என்ற படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது’ என்றார். 

Share this story