சூரி , அனா பென் நடித்துள்ள கொட்டுக்காளி ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

kottukalli

பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி அன்னா பென் நடித்துள்ள கொட்டுக்காளி திரைப்படம் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி அன்னா பென் நடித்துள்ள திரைப்படம் கொட்டுக்காளி கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கூழாங்கள் படத்தின் மூலம் சர்வதேச அளவில் கவனம் பெற்ற பி.எஸ் வினோத்ராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

null



கூழாங்கல் படத்தைப் போலவே கொட்டுக்காளி திரைப்படமும் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுக்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்தை திரையரங்கில் மக்கள் பார்வைக்காக வெளியிட்டது படக்குழு.கொட்டுக்காளி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை தற்போது படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி நாளை செப் 27 ஆம் தேதி இப்படம் அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது. ஓடிடியில் படம் வெளியானப்பின் இப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் எந்த மாதிரியான விமர்சனங்களை தருகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் . 

Share this story