சூரி, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிக்கும் ‘மாமன்’ படப்பிடிப்பு தொடக்கம்...!

soori

சூரி, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி இணைந்து நடிக்கும் படத்துக்கு ‘மாமன்’ என தலைப்பிடபட்டுள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.‘கருடன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, நடிகர் சூரி, ‘விலங்கு’ வெப்சீரிஸ் புகழ் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், எப்போது படப்பிடிப்பு என்பது தெரியாமல் இருந்தது. இதனையும் ‘கருடன்’ படத்தை தயாரித்த லார்ஸ் ஸ்டூடியோஸ் நிறுவனமே தயாரித்து வருகிறது. திருச்சியில் இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.maman
 
இதில் நாயகியாக ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிக்கவுள்ளார். ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் திருச்சியிலேயே முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இந்தப் படத்துக்கு ‘மாமன்’ என தலைப்பிட்டுள்ளனர். இந்தப் படத்தை முடித்துவிட்டு ‘செல்ஃபி’ இயக்குநர் மதிமாறன் இயக்கவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் சூரி. அதன் முதற்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

Share this story