"என்னைவிட புகழ் பெற்றிருக்க வேண்டியவன் நீ"... தனது இரட்டை சகோதரருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள சூரி!
சூரி தனது இரட்டை சகோதரருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் பல ஆண்டுகளாகப் போராடிய சூரி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக உருவெடுத்துள்ளார். சூரி கடைசியாக ரஜினி உடன் அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார். தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டான் படத்தில் நடித்து வருகிறார். மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடிக்கிறார்.

இன்று சூரி தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதை அடுத்து அவருக்கு திரைத்துறை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சூரியின் சகோதரருக்கும் இன்று பிறந்தநாள். சூரிக்கு இரட்டை சகோதரர் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் லட்சுமணன். இன்று அவருக்கும் பிறந்தநாள் என்பதால் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து பதிவிட்டுள்ளார் சூரி.
"ஒரே வயிற்றில் ஒரே நேரத்தில் ரெட்டை பிள்ளையாய் எனக்கு அடுத்து பிறந்தவன் லெட்சுமணன். உழைப்பிலும் திறமையிலும் உயர்ந்தவன். என்னைவிட புகழ் பெற்றிருக்க வேண்டியவன். முந்திப் பிறந்ததால்தான் இந்த முன்னேற்றம் என்றால், உனக்குப் பின்னால் பிறந்திருப்பேன் தம்பி... அடுத்த ஜென்மத்தில் எங்கள் அனைவருக்கும் நீயே அண்ணனாக பிறக்க வேண்டுகிறேன் பிறந்தநாள் வாழ்த்துகள் தம்பி..." என்று தெரிவித்துள்ளார்.
சூரியின் சகோதரருக்கும் பலர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

