சூரியை இயக்கும் ‘செல்ஃபி’ இயக்குநர்!

Soori

சூரி நடிக்கவுள்ள புதிய படத்தை ‘செல்ஃபி’ இயக்குநர் மதிமாறன் இயக்கவுள்ளார். ‘விடுதலை’ படத்தின் மூலம் சூரியை நாயகனாக அறிமுகப்படுத்தினார் வெற்றிமாறன். இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பலரும் சூரியை நாயகனாக நடிக்க வைக்க முன்வந்தார்கள். ஆனால், சூரியோ படங்களை வரிசைப்படுத்துவதில் கவனமாக இருக்கிறார்.

‘கருடன்’ வெற்றிக்குப் பிறகு, மீண்டும் குமார் தயாரிப்பில் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு நவம்பரில் துவங்கும் என தெரிகிறது. இதற்குப் பிறகு வெற்றிமாறன் தயாரிப்பில் படமொன்றில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். இதனை ‘செல்ஃபி’ படத்தினை இயக்கிய மதிமாறன் இயக்கவுள்ளார்.
இதற்கான கதையினை முடிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு ஜூனில் இதன் படப்பிடிப்பு துவங்கலாம் என்று சூரி முடிவு செய்திருக்கிறார். அதற்குள் பிரசாந்த் பாண்டிராஜ் படத்தினை முடித்து வெளியிட வேண்டும் எனவும் திட்டமிட்டு இருக்கிறார்.

Share this story