சூரி ஹீரோவாக நடித்த படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் எது தெரியுமா ?

soori

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ‘மண்டாடி’ என்ற படத்தில் சூரி ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் சத்யராஜ், சுஹாஸ், மகிமா நம்பியார், மிதுன் ஜெய் உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கடந்த 10ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இப்படம் ராமேஸ்வரம் பகுதியில் நடக்கும் பாய்மர படகு போட்டியை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். சூரி ஹீரோவாக நடிக்கும் படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், வணிக ரீதியாகவும் நல்ல வசூலை பெற்று வரும் நிலையில், ‘மண்டாடி’ படம் வெளியான 6 நாட்களில் உலகளவில் ரூ.65 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இப்படம் உலக அளவில் 3 நாள்களில் ரூ.30 கோடி வரை வசூலித்துள்ளது. சூரி ஹீரோவாக நடித்த படங்களிலேயே ‘மண்டாடி’ அதிக வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரைத்துறையை சேர்ந்த பலரும் இப்படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர். அந்தவகையில் ரஜினிகாந்த்  தன்னை போனில் அழைத்து வாழ்த்தியதாக சூரி சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். சூரியின் பதிவில், ‘ரஜினிகாந்த் சார் ‘மண்டாடி’ படத்தை பார்த்து ரசித்துள்ளார். அவர் மனமார போனில் அழைத்து வாழ்த்தியது எனக்கும் எங்கள் படக்குழுவினருக்கும் மிகமுக்கியமானது.

Share this story