சூரியின் ‘கொட்டுக்காளி’ ட்ரெய்லர் வெளியானது...!

Kottukali

கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல்வேறு மக்களின் ஆதரவை பெற்று பல விருதுகளையும் வென்றது. இதனால் இப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. இந்நிலையில், சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள 'கொட்டுக்காளி' திரைப்படம், வருகிற ஆகஸ்ட் 23ம் தேதி திரைக்கு வரவுள்ளது.  இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. 

சூரி, அன்னா பென் என ட்ரெய்லரில் தோன்றும் அத்தனை கேரக்டர்களும் சீரியாஸாக ஆரம்பம் முதல் இறுதிவரை உள்ளனர். ட்ரெய்லரில் ஒரே ஒருமுறை மட்டுமே வசனம் இடம்பெறுகிறது. மற்றபடி, காட்சியமைப்புகள் மட்டுமே பேசுகிறது. எனினும், அந்த காட்சியமைப்புகளும், ட்ரெய்லரின் எடிட்டிங்கும் கவனம் ஈர்க்க வைக்கிறது. குறிப்பாக, சேவலின் ஓசையுடன் பின்னணி இசையும் சேர்ந்து செய்யப்பட்டுள்ள எடிட்டிங் ட்ரெய்லரை மேலும் பார்க்க தூண்டுகிறது. சீரியாஸான, அதேநேரம் இன்டென்ஸான படம் கொட்டுக்காளி என்பதை ட்ரெய்லர் நமக்கு புரியவைக்கிறது.
 

Share this story