சினிமாவை தாண்டி தொழிலிலும் முன்னேறும் நடிகர் சூரி...!

Soori
விஜய், அஜித், ரஜினி, சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி காமெடி நடிகராக வளர்ந்தவர் நடிகர் சூரி. காமெடி நடிகராக கலக்கி வந்தவர் கடந்த வருடம் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தின் ஹீரோவாக நடித்தார்.தனக்கு கொடுத்திருந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்து அசத்தினார், அவரது நடிப்பிற்கு மக்கள் மத்தியில் நல்ல பாராட்டு கிடைத்தது.இப்படத்தை தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி கருடன் படத்தில் நடித்திருந்தார், இதிலும் அவரது நடிப்பிற்கு மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து இருந்தனர்.அடுத்து சூரி நடிப்பில் விடுதலை 2, ஏழு கடல் ஏழு மலை, கொட்டுக்காளி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.தற்போது ரூ. 8 கோடி வரை சம்பளம் வாங்கும் நடிகர் சூரி சினிமா மட்டுமின்றி தொழிலிலும் அசத்தி வருகிறார்.தனது சொந்த ஊரான மதுரையில் அம்மன் என்ற ஹோட்டல் ஒன்றை தொடங்கினார், இந்த நிலையில் நடிகர் சூரி புதியதாக மற்றொரு ஹோட்டலை இன்று திறந்துள்ளார்.மதுரை திருநகரில் அமைந்துள்ள இந்த ஹோட்டலை சூரியே திறந்து வைத்துள்ளார்.

Share this story