சூரியின் ‘கருடன்’ பட ரிலீஸ் அப்டேட்!....

photo

நடிகர் சூரி நடிப்பில் தயாராகி வரும் கருடன் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

photo

வெற்றிமாறனின் விடுதலை,சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுகாளியை தொடர்ந்து சூரி நாயகனாக களமிறங்கியுள்ள படம் கருடன்,இப்படம் வெற்றிமாறன் கதையில், எதிர்நீச்சல் புகழ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி கும்பகோணம் தேனி ஆகிய பகுதிகளில் படபிடிப்பு  நடைபெற்றுவந்த நிலையில் படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சமுத்திரகனி,உன்னிமுகுந்தன் ரேவதி சர்மா ஆகியோரும் நடித்துள்ளனர்.இந்த நிலையில் படத்தின் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது, அதன்படி படம் 2024 ஆண்டு மார்ச் 24 புனித வெள்ளியன்று திரைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Share this story